search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் சப்ளை"

    சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.
    சென்னை:

    கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கிய சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதும் வறண்டு விட்டன. பூண்டி, புழல் ஏரிகளில் உள்ள தண்ணீரும் இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இதனால் சென்னை நகரில் தண்ணீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கடந்த மாதம் முதலே வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்ட மெட்ரோ வாட்டர் பாதியாக குறைக்கப்பட்டது.

    தற்போது பைப்புகளில் வினியோகிக்கப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். போர்வெல்களில் நீரும் இல்லாததால் லாரி, டிராக்டரில் சப்ளை செய்யப்படும் தண்ணீரையே எதிர்பார்த்து காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட வட சென்னை பகுதியில் பைப்புகளில் தண்ணீர் வருவது நின்று விட்டது.

    கொளத்தூர் பகுதியில் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. பெருங்குடி பகுதியில் ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் சப்ளையாகிறது. அம்பத்தூரில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் ½ மணி நேரமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    கொட்டிவாக்கத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் 2 மணி நேரம், கோடம்பாக்கத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது.

    ராயபுரம், திருவொற்றியூர் பகுதியில் டேங்கர் லாரிகளில் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். நங்கநல்லூரில் வாரத்துக்கு ஒருமுறை ¾ மணி நேரம் மட்டும் தண்ணீர் சப்ளையாகிறது.

    முறையாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பகுதி வாரியாக 800 லாரிகள் மூலம் 8 ஆயிரத்து 400 முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ரெட்டேரி ஏரியில் இருந்து அடுத்த மாதம் முதல் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    மேலும் பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரி தண்ணீரையும் குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்பி உள்ளனர்.

    சென்னை மாநகர் குடிநீர் தேவையை சமாளிக்க தற்போது 7071 லாரிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் 100 டேங்கர் லாரிகளில் குடிநீர் வழங்க மெட்ரோ குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. #DrinkingWater
    சென்னை:

    பருவ மழை சரியாக பெய்யாததால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் கோடை வெயில் கொளுத்தி வருவதையொட்டி சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்பட 4 ஏரிகளும் வறண்டு வருகின்றன.

    கோடையில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் மூலம் டேங்கர் லாரிகளில் குடிதண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு தற்போது லாரிகளில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. மேலும் காலதாமதமாக குடிநீர் லாரிகள் வருகின்றன. குடி தண்ணீர் டேங்கர் லாரிகளின் சப்னை எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருவல்லிக்கேணி, சூளைமேடு, அடையாறு பகுதிகளில் குடிநீர் லாரிகள் ‘புக்‘ செய்து 20 நாட்களுக்கு பிறகுதான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த பகுதிகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. குடிதண்ணீர் தேவையை சமாளிக்க கூடுதல் லாரிகளில் தண்ணீர் வழங்க அப்பகுதி மக்கள் மெட்ரோ குடிநீர் வாரியத்தை வலியுறுத்தி வந்தனர்.

    சென்னை மாநகர் குடிநீர் தேவையை சமாளிக்க டேங்கர் லாரி எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போது 7071 லாரிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. 2600 கட்டண குடிநீர் லாரிகளும் செயல்படுகிறது.

    மேலும் 100 டேங்கர் லாரிகளில் குடிநீர் வழங்க மெட்ரோ குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. லாரிகளில் குடிநீர் நிரப்பும் பகுதிகளில் 100 லாரிகள் கூடுதலாக செயல்பட்டு குடிதண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்ளது. #DrinkingWater

    ×